செய்திகள்,திரையுலகம் தெலுங்கில் ‘எந்திரன்’ படத்தை மிஞ்சும் ‘ஐ’ படம்!…

தெலுங்கில் ‘எந்திரன்’ படத்தை மிஞ்சும் ‘ஐ’ படம்!…

தெலுங்கில் ‘எந்திரன்’ படத்தை மிஞ்சும் ‘ஐ’ படம்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆகியிருக்கும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். ‘லிங்கா’ படத்தின் பட்ஜெட் ரஜினிகாந்தின் சம்பளத்தை மட்டும் தனியாகக் கணக்கிட்டால் அதுவும் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். விரைவில் தமிழில் இந்தப் படங்களின் வியாபாரப் பேச்சுகள் முடிவடைந்து விட வாய்ப்புள்ளது.

அதே சமயம், தெலுங்கில் ‘ஐ’ படத்தின் டப்பிங் உரிமை கடந்த சில மாதங்களுக்கு முன்பே சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு விட்டது. இப்போது படத்தின் ஏரியா வாரியான வியாபாரம் ஆகியுள்ளதாம். குறிப்பிட்ட வினியோக ஏரியாவான கிருஷ்ணா மாவட்டத்தில் ‘ஐ’ படம் சுமார் 2.50 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாம். அந்த ஏரியாவைப் பொறுத்தவரையில் இதுவரை 6 படங்கள் மட்டுமே 2.50 கோடிக்கு மேல் வசூல் செய்து கொடுத்துள்ளதாம்.

அப்படியிருக்க ஒரு தமிழ் டப்பிங் படத்திற்கு இந்த அளவிற்கு வியாபாரம் நடந்துள்ளது தெலுங்கு வினியோகஸ்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். அடுத்து ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படமும் தெலுங்கில் வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் தமிழ் டப்பிங் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை தெலுங்குத் திரையுலகம் வியப்பாகப் பார்த்து வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி