இதனால் கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து கரை ஒதுங்கி பலியான திமிங்கலங்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.கரையொதுங்கும் திமிங்கலங்களை மீட்கும் தன்னார்வ குழுவை சேர்ந்த டாரென் க்ரோவர் இது குறித்து தெரிவிக்கையில், மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலங்கள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடும் என்ற எங்களின் நம்பிக்கை வீணாகிவிட்டது. இது கடலுக்குள் திமிங்கலங்களை வெற்றிகரமாக அனுப்பியதற்கு கிடைத்துள்ள வருத்தமான முடிவு.
அழகான இந்த திமிங்கலங்கள் அவற்றின் இயற்கையான சூழலில் இருந்து வெளியே வந்த பிறகு ஒவ்வொரு நிமிடமும் அவற்றிற்கு வேதனையாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளார்.நியூசிலாந்தில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பது வழக்கமாகியுள்ள நிலையில், இதற்கான சரியான காரணம் குறித்து தெளிவான புரிதல் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி