சில மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார்கள். ரஞ்சித் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது நடிகை ராகசுதாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்’ என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர்.
தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். நித்யானந்தா ஆசிரமத்திலும் தொடர்பு வைத்து இருந்தார். ராகசுதாவை திருமணம் செய்து கொள்வதை ரஞ்சித்தும் உறுதிபடுத்தினார்.
அவர் கூறும் போது, ராகசுதாவும் நானும் நட்பாக பழகினோம். அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளில் நான் ஈர்க்கப்பட்டேன். இவருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுதுள்ளோம். எங்கள் திருமணத்துக்கு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வருகின்ற 10ம் தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி