செய்திகள்,பரபரப்பு செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…

தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!…

தெலுங்கானாவில் ஐந்து மாதங்களில் 350 விவசாயிகள் தற்கொலை!… post thumbnail image
மேடக்:-தெலுங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதிவி ஏற்ற ஐந்து மாத காலத்தில் வறட்சி, எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது போன்ற காரணங்களால் கடன் சுமைக்கு ஆளானதாக கூறப்படும் சுமார் 350 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள லுகயபள்ளி பகுதியை சேர்ந்த அன்ஜி நாயக் எனும் 28 வயது விவசாயி கடன் சுமையால் தசரா தினத்தன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தொடர்ச்சியாக பயிரிட்ட பயிர்கள் எதிர்பார்த்த விளைச்சலை தராததால் கடன்சுமைக்கு ஆளானதால் இந்த விபரீத முடிவை அன்ஜி எடுத்ததாக அவரது தாய் ரத்னம் கூறியுள்ளார். மகனின் மறைவுக்கு பின் தன் பேரக்குழந்தைகள், மருமகள் எப்படி பிழைக்க முடியும் என கேள்வி எழுப்பும் அவர், இன்னும் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

இதே போல மாநிலம் முழுவதும் பல விவசாயிகள் தற்கொலை செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயத்துறை அமைச்சர் போச்சரம் ஸ்ரீனிவாஸ் தெரிவிக்கையில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க அரசு முடிந்த அளவிற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இந்த சூழல் நாடு முழுவதும் நிலவுகிறது, இயற்கை பேரிடர், குறைவான மழை, பயிர் சேதம் போன்றவற்றால் இந்த துயரம் நிகழ்கிறது எனக் கூறியதாக தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி