‘கத்தி’ படம் வெளியாகி 12 நாட்களில் உலகமெங்கும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் பண்ணினார். அதைப் பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அந்த தகவலை, ட்வீட் பண்ணினார். குறைந்த நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனையை உலகம் அறியச் செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர் விஜய் ரசிகர்கள். எனவே #Kaththihitsfastest100cr என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பரபரப்பாக ட்வீட் செய்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களின் சுறுசுறுப்பு காரணமாக #Kaththihitsfastest100cr என்ற ஹேஷ்டேக் சென்னை, இந்திய டிரென்டில் முதலிடம் பிடித்துவிட்டது. தற்போது உலக டிரென்டிலும் இடம் பிடிருத்திருக்கிறது இந்த #Kaththihitsfastest100cr ஹேஷ்டேக். அடுத்த கட்டமாக உலக அளவிலும் முதலிடத்தை பிடிக்கும் என விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி