செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் 2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…

2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!…

2015ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது வாட்ஸ் அப்!… post thumbnail image
தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள ‘வாட்ஸ்–அப்’ புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது.’வாட்ஸ்–அப்’ இந்த ஆண்டு இறுதிக்கு தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி ‘வாட்ஸ்–அப்’பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வாட்ஸ்-அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் வாட்ஸ்-அப் 4.5.5 பதிப்பில் வெளியாகுகிறது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி