ஒரு நிமிடம் அமதியாக இருந்தவர்… ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ”மெர்சலாயிட்டேன்…” என்ற பாடலை போட்டு காட்டினார். உண்மையாகவே அந்தப்பாட்டை பார்த்துவிட்டு மெர்சலாகிவிட்டோம். அந்தளவுக்கு அந்த ஒருபாட்டு மட்டும் இருக்கிறது. விக்ரம்-எமி ஆடிப்பாடும் காட்சிகளில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தி எடுத்துள்ளனர். உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சலாவார்கள். ஐ படத்தின் கிராபிக்ஸ் பணிக்காக சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐதராபாத், மும்பை மற்றும் சென்னையை சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குனர் உட்பட அனைவரும் தீவிரமாக உழைக்கின்றனர். அவசரப்பட்டு நான் ரிலிஸ் செய்வது சரியா இருக்காது, பணத்துக்காக என்றால் எப்போதோ வெளியிட்டு இருப்பேன். நான் மிகப்பெரிய சினிமா ரசிகன், என்னைப்போல் இன்னும் நூறாயிரம் பேர் தமிழ் சினிமாவை ரசிக்க வேண்டும். ஐ படத்தில் அனைவரது உழைப்பும் இருக்கிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளேன். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன், நூறு வருட தமிழ் சினிமாவை ஐ என்ற ஒரு படம் பேச வைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி