செய்திகள் கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!…

கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!…

கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!… post thumbnail image
சிட்னி:-லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி செல்லவிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக விமான நிறுவனம் அளித்த தகவலில், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னி செல்லவிருந்த விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தின் சிங்க்கில் கசிவு ஏற்பட்டதால், தரமான இயக்க நடைமுறைகளுக்கு ஏற்ப அந்த விமானம் திருப்பி அனுப்பப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், விமானத்தின் கழிவறையில் கசிவு ஏற்பட்டதாகவும், கழிவுகள் பயணிகள் அமர்ந்திருக்கும் இடம் வரை வந்ததால் தாங்கமுடியாத அளவிற்கு நாற்றம் உண்டானதாகவும் பயணி ஒருவர் கூறியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விமான நிறுவனம், விமான கழிப்பறைகளுக்கு தனி வடிகால் அமைப்பு உள்ளது. இந்த பிரச்னைக்கு காரணம் சிங்க்கில் ஏற்பட்ட கசிவு தான். விமானத்தில் கழிவறை கசிவு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி