சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ‘லிங்கா’ படத்தின் டீஸர் கடந்த 1ம் தேதி 4 மணியளவில் வெளியாகியிருந்தது.அந்த டீஸர் வெளியான 40 மணி நேரங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. அதோடு 11 ஆயிரம் பேர் இந்த டீஸரை லைக் செய்துள்ளனர்.
ஆனால், ‘ஐ’ படத்தின் டீசர் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு ஒரே நாளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பார்க்க வைத்தது. ஆனால், ‘லிங்கா’ டீசரால் ‘ஐ’ படத்தின் அந்தச் சாதனையை முறியடிக்க முடியவில்லை. ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார் என பல பிரம்மாண்டங்கள் இருந்தும் லிங்கா டீஸரால், ஐ படத்தின் சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி