செய்திகள்,திரையுலகம் தெலுங்கிலும் வசூலை அள்ளும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!…

தெலுங்கிலும் வசூலை அள்ளும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!…

தெலுங்கிலும் வசூலை அள்ளும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’!… post thumbnail image
சென்னை:-கடந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் படமாக, மிகப்பெரிய வசூல்சாதனை படைத்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. தமிழில் சூப்பர் ஹிட்டானதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரைட்ஸ் வாங்க மிகப்பெரிய போட்டியே நடந்தது. எனவே பெரிய விலைக்கு விற்கப்பட்டது. தெலுங்கில் கரண்ட் தீகா என்ற பெயரில் ரீ-மேக் சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது.

மஞ்சு மனோஜ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ் நடித்த வேடத்தில் சீனியர் தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு நடிக்க, பிந்துமாதவி நடித்த டீச்சர் வேடத்தில் பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். கரண்ட் தீகா படத்திற்கு தெலுங்கிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்களாம். தெலுங்குத் திரையுலகின் விநியோக ஏரியாவான பிலிம் நகரில் இருந்து வரும் செய்திகளை பார்க்கும்போது இப்படம் உறுதியாக தெலுங்கிலும் பாக்ஸ் ஆஃபீசில் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி