சென்னை:-ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர் நடிகை அசின். பின் ஹிந்திப் பட மோகத்தால் தமிழ் சினிமாவை புறக்கணித்தார். தற்போது அங்கும் மார்க்கெட் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இயக்குனர் முருகதாஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
உடனே அவர் முன் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அசின் சார் என்னை வைத்து ஒரு படம் இயக்குவதாக கூறினீர்கள், மறந்துட்டீங்களா?… என்று கேட்க அவரும் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கத்தி படம் குறித்து அசின் தன் டுவிட்டர் பக்கத்தில் சமீப காலமாக புகழ்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி