அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!… post thumbnail image
ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும் வகையில் 182 அடி உயரத்தில் அந்த சிலை கட்டப்பட உள்ளது.

‘‘ஒற்றுமையின் சின்னம்’’ என்று அந்த சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலைக்கான கட்டுமான பணிகள் சமீபத்தில் தொடங்கியது. எல் அண்ட் டி நிறுவனம் இந்த கட்டுமான பொறுப்பை ஏற்றுள்ளது.182 அடி சிலை 90 சதவீதம் இரும்பால் கட்டப்படுகிறது. எனவே சிலையை முழுமையாக முடிக்க சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவாகும் என்று குஜராத் முதல்–மந்திரி ஆனந்தி பென் படேல் கூறினார்.

உலக சாதனை படைக்கப் போகும் இந்த சிலை 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். இதற்காக இரும்பு துண்டுகள் சேகரிக்கும் பணி நாடெங்கும் நடந்து வருகிறது. சிலை கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதை உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி