செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…

‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!…

‘ஐ’ என்றால் அழகு – இயக்குனர் ஷங்கர்!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் உருவான விதம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதில் படம் உருவானவிதம் மற்றும் பாடல்கள் உருவானவிதம் பற்றி இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதில் ஷங்கர் கூறும்போது, இப்படத்திற்கு ஏற்ற தலைப்பு அழகன் அல்லது ஆணழகன் என்று வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு தலைப்பில் ஏற்கனவே படங்கள் வெளியாகிவிட்டது. எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு எழுத்தில் தலைப்பு வைக்க வேண்டும் என்று ஆசை. அதேபோல் ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு. ஐ-க்கு தமிழில் என்ன அர்த்தம் எல்லாம் இருக்கிறது என்று தேடினோம். அப்போது ‘ஐ’ என்றால் அழகு என்று ஒரு அர்த்தம் இருந்தது. உடனே இதுதான் சரியான தலைப்பு என்று வைத்தேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி