லண்டன்:-மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்க டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் கண்டுபிடித்துள்ளார்.
4 கிலோ எடையுள்ள இந்த விமானம் மணிக்கு 100 கிலோமீட்டர் வேத்தில் பறக்க கூடியது. மாரடைப்பு நோயாளிகளின் அவசர டெலிபோன் கால் கிடைத்ததும் டிரோனில் உள்ள அதிர்வு கருவி செயல்படதொடங்கும். அதன் மூலம் ஆளில்லா விமானம் நோளாளி இருக்கும் இடத்துக்கு சென்று சில வினாடிகளில் தேவையான மருத்துவ உதவியை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி