செய்திகள்,திரையுலகம் ஈசிஆர் சாலை ஸ்டுடியோவில் நடிகர் விஜய் படத்தின் அரண்மனை செட்!…

ஈசிஆர் சாலை ஸ்டுடியோவில் நடிகர் விஜய் படத்தின் அரண்மனை செட்!…

ஈசிஆர் சாலை ஸ்டுடியோவில் நடிகர் விஜய் படத்தின் அரண்மனை செட்!… post thumbnail image
சென்னை:-சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதால் நடிகர் நடிகைகள் அந்த ஏரியாவில் குடியிருப்பதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் அனைத்து முன்னணி நடிகர்களும் அங்கு பங்களா கட்டி குடியேறி விட்டனர். அதையடுத்து, இப்போது ஈசிஆர் சாலையில் சுமார் 25 ஏக்கரில் ஆதித்யாராம் என்ற பெயரில் ஒரு அதிநவீன ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளது.

தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களின் செட் இந்த இடத்தில்தான் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது இந்த புதிய ஸ்டுடியோவில்தான் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பிரம்மாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சரித்திர காலத்துக்கேற்ற லொகேசனும் இந்த ஸ்டுடியோவிற்குள் அதிகமாக இருப்பதால் இங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் சிம்புதேவன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி