செய்திகள்,திரையுலகம் நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி!…

நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி!…

நடிகை ஸ்ருதிஹாசன் கொடுத்த அதிர்ச்சி!… post thumbnail image
சென்னை:-தெலுங்கில் கிளாமராகவும், ராசியான நடிகையாகவும் இருந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழில் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தை மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் ஸ்ருதி. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்கள். அவர் ஒண்ணேகால் கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று சொன்னாராம்.

முதலில் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள், அதன் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதம் சொன்னார்களாம். இதுதான் ஸ்ருதிஹாசனின் இதுவரையிலான அதிக சம்பளம் என டோலிவுட் வட்டாரமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளதாம். ஸ்ருதியின் சம்பள விவகாரத்தைக் கேட்ட மற்ற போட்டியாளர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமல்ல பேரதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி