செய்திகள்,திரையுலகம் ராணாவை நடிகை திரிஷா ஓரங்கட்டுவது ஏன்!…

ராணாவை நடிகை திரிஷா ஓரங்கட்டுவது ஏன்!…

ராணாவை நடிகை திரிஷா ஓரங்கட்டுவது ஏன்!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷாவின் தமிழ் சினிமா மார்க்கெட் தற்போது பிசியாகவே உள்ளது.இந்நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் திரிஷா, ஏற்கனவே தெலுங்கில் வெளியான தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கான பவர் படத்தில் நடித்தவர், தெலுங்கில் வெளியான அத்திரின்டிக்கி தாரெடி என்ற படத்தின் கன்னட ரீமேக்கிலும் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக, தெலுங்கு படங்களின் கன்னட ரீமேக் என்றாலே திரிஷாவுக்கே செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதன்காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வந்த த்ரிஷா. ராணாவுடன் தான் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களோ, செய்திகளோ வெளியானால் மற்ற ஹீரோக்களுக்கு தன் மீது ஈர்ப்பு ஏற்படாது. அதனால் புதிய படவாய்ப்புகள் வருவது கடினம் என்பதால்தான், சமீபத்தில் அவரை தான் விலகி விட்டது போன்று மீடியாக்களில் செய்தி கசிய வைத்தாராம்.

இப்போது அவர் சம்பந்தப்பட்ட எந்த தெலுங்குப்பட விழாக்களில் தன்னை கலந்து கொள்ள அழைத்தாலும் இந்த காரணத்தையே சொல்லி எஸ்கேப்பாகி வருகிறாராம் த்ரிஷா. ஆனால் அவர்களுக்கிடையிலான நெருக்கம் எப்போதும போல் இப்போதும் தொடர்ந்துதான் வருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி