செய்திகள்,திரையுலகம் மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!…

மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!…

மீண்டும் இணைந்த பசங்க ஹீரோக்கள்!… post thumbnail image
சென்னை:-பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த சிறுவர்களான ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் விடலை பையன்களாக கோலிசோடா படத்தில் நடித்தார்கள். இப்போது வஜ்ரம் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பவானி ரெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.

உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இதனை இயக்குகிறார். மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய கல்வி வியாபாரமாகிவிட்டது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமையான கல்வியை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னை படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லுகிற படம். ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார், பைசல் இசை அமைக்கிறார். சென்னை, மூணார், சாலக்குடி பகுதியிலும், ஒரு பகுதி படம் அஸ்ஸாம் மாநிலத்திலும் படமாக்கப்படுகிறது என்கிறார் ரமேஷ் செல்வன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி