அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழ் நரேந்திர மோடி குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போது பாகிஸ்தான் முஸ்லிம்களை கொன்று வருகிறார். அவர், கேரளாவுக்கு வந்தால் அவருக்கு இதில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் மண்டியிட்டு இருக்கும் நபரின் கதிதான் ஏற்படும் என மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. உடனே அவர் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் கடிதத்தை ஒப்படைத்து புகார் செய்தார். அவர் மிரட்டல் கடிதம் பற்றி உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தர விட்டார்.இதையடுத்து போலீஸ் அதிரடி விசாரணையில் இறங்கியது. மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்று விசாரித்தபோது மாவேலிக்கரா பகுதியில் இருந்து அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒரு அமைப்பின் பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த அமைப்பிடம் கேட்ட போது தங்களுக்கும் இந்த கடிதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தது. மோடியை பிரபலப்படுத்துவதற்காக பா.ஜனதாவே திட்டமிட்டு நடத்திய செயல் இது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.
இதனால், கடிதத்தை அனுப்பியது யார்?… எதற்காக அனுப்பப்பட்டது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மிரட்டல் கடிதம் அனுப்பியவரை கண்டு பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலை தேசிய புனித தலமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.இதையடுத்து பிரதமர் மோடி சபரிமலைக்கு வருவார் என்று தகவல் வெளியானது. சபரிமலை மண்டல பூஜை விழாவில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.இது தொடர்பாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேரள மாநில போலீசாருடன் மோடி கேரளா வந்தால் அவருக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் பிரதமரின் வருகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் மிரட்டல் கடிதம் வந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி