செய்திகள்,திரையுலகம் நவம்பர் மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!…

நவம்பர் மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!…

நவம்பர் மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!… post thumbnail image
சென்னை:-நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான 7ம் தேதி ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் ரிலீஸாகிறது. அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான நவம்பர் 14ம் தேதி ‘காவியத்தலைவன்’ படமும், ‘திருடன் போலீஸ்’ படமும் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையான நவம்பர் 21ம் தேதியும் பெரிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை.

காரணம்,நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதி ‘ஐ’ திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்திற்கு தமிழகத்திலுள்ள பெரும்பாலான தியேட்டர்களை இப்போதே பிளாக் செய்துவிட்டனர். நவம்பர் 21ம் தேதி படத்தை ரிலீஸ் செய்தால் ஒருவாரம் மட்டுமே ஓடும். எனவேதான் இந்த தேதியை யாரும் விரும்பவில்லை.படங்களின் வெளியீட்டில் மட்டுமல்ல, இசைவெளியீட்டிலும் நவம்பர் மாதம் முக்கியத்துவம் பெறுகிறது. நவம்பர் 14ம் தேதி ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
‘அனேகன்’ படத்தின் இசை வெளியீடும் நவம்பரில்தான் நடக்கவிருக்கிறதாம். ‘தல55’ படத்தின் பாடல்களும் நவம்பரில் வெளிவர உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி