வாஷிங்டன்:-சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து சென்ற பெயரிடப்படாத அமெரிக்காவின் சரக்கு ராக்கெட் ஒன்று ஏவிய சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. 5,055 பவுண்ட்ஸ் எடை கொண்ட அறிவியல் சோதனைகள் மற்றும் உபகரணங்களோடு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6.22 மணிக்கு கிளம்ப தயாராயிருந்தது.
கிழக்கு வெர்ஜினியாவில் நாசா ஏவுதளத்திலிருந்து கிளம்பிய இந்த ராக்கெட் , புறப்பட்ட சில நிமிடங்களில் தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ராக்கெட் ஏவுதளத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தீவிர விசாரணைக்கு நாசா உத்தரவிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி