செய்திகள்,திரையுலகம் மும்பை மருத்துவமனைக்கு ஜோடியாக சென்ற விராட் கோலி, அனுஷ்கா!…

மும்பை மருத்துவமனைக்கு ஜோடியாக சென்ற விராட் கோலி, அனுஷ்கா!…

மும்பை மருத்துவமனைக்கு ஜோடியாக சென்ற விராட் கோலி, அனுஷ்கா!… post thumbnail image
மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இவரும் பிரபல இந்தி நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவதாக தெரிகிறது.மும்பையில் பல பொது இடங்களுக்கு ஜோடியாக செல்லும் இவர்கள் இருவரும் அந்தேரியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரையும் ஒன்றாக மருத்துவமனை வளாகத்தில் பார்த்த பொதுமக்கள் அவர்களின் புகைப்படத்தை தங்கள் செல்போன்களில் பதிவு செய்ததாக தெரிகிறது. விராட் மற்றும் அனுஷ்காவின் குடும்பத்தினர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய தேதி பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது அனுஷ்கா ஷர்மா நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘பிகே’ படத்தை பிரபலபடுத்த நடத்தப்பட்ட ஏற்பாடு எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி