மும்பை:-நடிகை ரியாகான் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மும்பையில் ரியாகான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக நடித்து வந்தார். இரு தினங்களுக்கு முன் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டு படப்பிடிப்பு அரங்கில் ஓரமாக உட்கார்ந்து இருந்தார். படக்குழுவினர் வேறு காட்சிகள் எடுப்பதற்காக இன்னொரு இடத்துக்கு சென்று விட்டனர். ரியாகான் மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த தயாரிப்பு நிர்வாகி, ரியாகான் தனியாக இருப்பதை பார்த்ததும் சபலப்பட்டார். அவரை வாயை பொத்தி கற்பழிக்க முயன்றார். ரியாகான் ஆவேசமாக அந்த நபரை அடித்து தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டார். இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்யவில்லை. ஆனால் தயாரிப்பாளரிடம் புகார் கூறினார். இதையடுத்து தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து கடுமையாக கண்டித்தனர். படப்பிடிப்பில் இருந்து அவரை வெளியேற்றியும் விட்டனர். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த விஷயம் வெளியே கசிந்துள்ளது. மும்பை பட உலகில் எல்லோரும் இதுபற்றியே பேசுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி