செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!…

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!…

டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணிக்கு சறுக்கல்!… post thumbnail image
துபாய்:-சர்வதேச போட்டி தொடரின் முடிவுகளை பொறுத்து அணிகளின் தர வரிசை பட்டியலில் மாற்றம் ஏற்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக துபாயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் பாகிஸ்தான் அணி, இந்த போட்டி தொடர் முடிந்ததும் வெளியிடப்படும் உலக டெஸ்ட் தர வரிசையில் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறும்.

இந்திய அணி 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டதன் மூலம் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கலாம் என்ற ஆஸ்திரேலிய அணியின் கனவு கலைந்து போனது. ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தோற்று விட்டதால் அதற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை. அபுதாபியில் அடுத்து நடைபெறும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும்.

அப்படி செய்தால் தென் ஆப்பிரிக்காவை விட 3 புள்ளிகள் பின் தங்கி 2-வது இடத்தில் நீடிக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி 3-வது இடத்துக்கு முன்னேறும். 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து, 4-வது இடம் வகிக்கும் இலங்கை, 5-வது இடத்தில் உள்ள இந்தியா ஆகிய அணிகள் பின்னடைவை சந்திக்கும். பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தால் பாகிஸ்தான் அணி 5-வது இடத்தில் இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் டிரா செய்தால் பாகிஸ்தான் அணி 4-வது இடத்துக்கு முன்னேறும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி