சென்னை:-இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது நடிப்பு, இசையமைப்பு என ஏக பிஸியாக உள்ளார். இந்நிலையில் தான் நடித்து வரும் பென்சில் படத்தின் சூட்டிங்கிற்காக, ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுடன் அக்டோபர் 26 இரவு டோக்கியோ புறப்பட்டு சென்றுள்ளார்.
பென்சில் படம் நகர்புறம் சார்ந்த கதை என்பதால் இதில் 2 பாடல்கள் ஜப்பானில் படமாக்கப்பட உள்ளதாம். படம் பற்றி ஜி.வி., யிடம் கேட்ட போது, பென்சில் படத்தின் 80 சதவீதம் வேலைகள் முடிந்து விட்டன. இந்த பாடல்களுடன் படப்பிடிப்புக்கள் முடிந்து விடும். அதன் பிறகு எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட வேலைகள் தான். மணி நாகராஜ் இயக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி