அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…

பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!…

பிரேசிலில் நடந்த மறு தேர்தலில் அதிபர் டில்மாரூசேப் அமோக வெற்றி!… post thumbnail image
பிரசிலியா:-தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 5ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே நேற்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. அதில் முதல் 2 இடங்களை பிடித்த தற்போதைய அதிபரும், தொழிலாளர் கட்சி தலைவருமான டில்மா ரூசேப், பிரேசிலின் சோசியல் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஏசியோ நெவெஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. அதைத் தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டன. முடிவில் அதிபர் டில்மா ரூசேப் அமோக வெற்றி பெற்றார். இவர் மெஜாரிட்டிக்கு தேவையான 51 சதவீதம் வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏசியோ நெவஸ்சுக்கு 48 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. டில்மாரூசேப் வெற்றி பெற்றதை அறிந்ததும் அவரது கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் தலைநகர் பிரசிலியாவில் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். டில்மாரூசேப்பும் தனது மகிழ்ச்சியை கொண்டாடினார்.

அப்போது பிரேசில் எதிர்காலம் சிறப்பானதாக அமைய அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அரசியல் சீரமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார். தனது 2வது முறை பதவிக்காலத்தில் நாட்டை மிக சிறப்பாக வழிநடத்தப் போவதாக உறுதி அளித்தார். கட்சி தலைவர் ஜயிஷ் இனாசியோ லுலாடா சில்வாவுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.டில்மாரூசேப் கடந்த 2010ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார். தற்போது அவர் 2வது முறையாக வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி