சென்னை:-நடிகை ஷீலா தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். ‘சீனா தானா 001’, ‘வேதா’, ‘கண்ணா’, ‘இளவட்டம்’ போன்றவை ஷீலா நடித்த முக்கிய தமிழ் படங்கள். தற்போது ஷீலாவுக்கு படங்கள் இல்லை.இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கும், ஷீலாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவியது. இந்த நெருக்கம் மூலமாக ஷீலா கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த செய்தியை ஷீலா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:–
எனக்கும், பட அதிபர் தில்ராஜுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. கடந்த 3 வருடங்களாக தெலுங்கு படங்கள் எதிலும் நான் நடிக்கவில்லை. ஒரு வருடமாக இங்கிலாந்தில் வசிக்கிறேன். நான் எப்படி தில்ராஜுவை காதலித்து இருக்க முடியும். இதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. தொடர்ந்து இந்த வதந்திகளை இன்டர்நெட்டில் பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி