செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜீத்தின் அறிமுக பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது!…

நடிகர் அஜீத்தின் அறிமுக பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது!…

நடிகர் அஜீத்தின் அறிமுக பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு அறிமுக பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலை சமீபத்தில் சென்னையில் முக்கிய வீதிகளில் படக்குழுவினர் படமாக்கினர். இந்த பாடலுக்கு சதீஷ் நடனம் அமைத்துள்ளார்.

அஜீத்தும், அருண் விஜய்யும் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ என தொடங்கும் பாடலை ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடலை எடுத்து முடித்துவிட்டதாக நடன இயக்குனர் சதீஷ் தனது சமூக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, தல 55 படத்தின் பாடல் படப்பிடிப்பு முடிவடைந்தது. என்னுடைய நடன அமைப்பில் அஜீத் ஆடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் கவுதம் மேனனுக்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகர் அருண் விஜய், அழகான பாடல் வரிகளை எழுதிய விக்னேஷ் சிவனுக்கு பெரிய நன்றிகள் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி