சென்னை:-ஜெயம் ரவி முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் படம் தனியொருவன். ரவியின் அண்ணான ஜெயம் ராஜாவே இப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கிறது, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகையில் படத்தில் நயன்தாரா எந்தமாதிரியான ரோலில் நடிக்கிறார் என்பது வெளியாகியுள்ளது.
நயன்தாரா இப்படத்தில் ஐபிஎஸ்., ஆபிசராக நடிக்கிறார். அதுமட்டுமல்ல படத்தில் நயன்தாரா குதிரையில் சவாரி செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் உள்ளதாம். இதனால் ஷூட்டிங்கிற்கு முன்பாக தானே குதிரையேற்றம் பயிற்சி எல்லாம் செய்து இப்போது, போலீஸ் உடையில், குதிரையில் அமர்ந்தபடி சவாரி செய்கிறாராம். நயன்தாராவின் இந்த குதிரையேற்ற முறையை பார்த்து டீமே வியக்கிறதாம். விரைவில் ஒருபவர்புல்லான ஐபிஎஸ்., அதிகாரியாக ரசிகர்கள் முன் தோன்ற இருக்கிறார் நயன்தாரா. தனியொருவன் படம் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியாகும் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி