சென்னை:-‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ஹீரோ விஜய், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் ஆகியோருடன் இணைந்து ‘கத்தி’ படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுமே பலர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர். ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில படங்களாக அவருடைய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார்.
அவரும் திடீரென அனிருத் பக்கம் சாய்ந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.’கத்தி’ படத்தில் இடம் பெற்ற “செல்ஃபி புள்ள…, ஆத்தி…, பக்கம் வந்து…, யார் பெற்ற மகனோ…” என ஒவ்வொரு பாடலும் வெரைட்டியாக அமைந்து மீண்டும் ஒரு மியூசிக்கல் ஹிட்டைக் கொடுத்து விட்டார். இந்த ஆண்டில் இதற்கு முன் அவர் இசையமைத்து வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே” ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது.
அந்தப் படங்களின் பாடல்களும் ஹிட்டான பாடல்களாக அமைந்தது. அனிருத் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை இதுவரை பத்து என்பதைக் கூடத் தாண்டவில்லை. அதற்குள்ளாக பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி