அதாவது, கிருஷ்ணா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் இறந்தவர்களெல்லாம் மீண்டும் மனிதர்களாக நடமாடுவார்கள். எல்லோர் கண்களுக்கும் தெரிவார்கள். ஆனால் இந்த மாஸ் படத்தில் இறந்து போன சில ஆன்மாக்கள் சூர்யாவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்களாம். அதாவது கல்யாணராமன் படத்தில் இறந்து போன கமல், இன்னொரு கமலின் கண்களுக்கு மட்டுமே தெரிவாரே அதேபோன்றுதானாம்.
மேலும், முதலில் யாரோ சிலர் தன்னை எங்கு சென்றாலும் பின்தொடர்வதை கண்டு டென்சனாகும் சூர்யாவுக்கு, அவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதபோதுதான், அவர்கள் ஆவிகள் என்பதை உணர்கிறாராம். அதையடுத்து, எதற்காக என்னையே தொடர்ந்து வருகிறீர்கள்? என்று ஆவிகளிடம் சூர்யா கேட்கும்போதுதான், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினையை சூர்யாவிடம் சொல்லி, அதை நிவர்த்தி பண்ணுமாறு கூறுகிறார்களாம். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் சூர்யா எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் மாஸ் படத்தின் கதையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி