செய்திகள்,திரையுலகம் பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க நடிகை ரியாசென் விருப்பம்!…

பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க நடிகை ரியாசென் விருப்பம்!…

பாரதிராஜாவிடம் மீண்டும் அடிவாங்க நடிகை ரியாசென் விருப்பம்!… post thumbnail image
சென்னை:-15 வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடித்தவர் நடிகை ரியா சென். அதன்பிறகு குட்லக் என்ற படத்தில் நடித்தார். பின்னர் இந்தி படங்களில் பிசியாகிவிட்டார். தற்போதும் இந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வருகிறார். அவர் மீண்டும் பாரதிராஜா படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.அவர்கூறியிருப்பதாவது:

தாஜ்மஹால் படத்தில் நான் நடித்த போது 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இன்று வரை நான் நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தாஜ்மஹாலில் பாரதிராஜா எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள்தான். தாஜ்மஹால் என் வாழ்க்கையில் முக்கியமான படம். என்னால் மறக்க முடியாத படம்.
மீண்டும் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஒரு படம் அல்ல நூறு படமென்றாலும் நான் நடிக்க தயார். தாஜ்மஹாலில் நடித்தபோது அவர் ஒரு பெண் எப்படி நடிக்க வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.

அதன் பிறகு எந்த இயக்குனரும் எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை. தாஜ்மஹாலில் நடித்தபோது பாரதிராஜா என்னை அடித்திருக்கிறார். இப்போது அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிவாங்கவும் தயார். ஆனால் இப்போது நான் பக்குவப்பட்ட நடிகை அதனால் அடிவாங்காத அளவிற்கு நடித்து விடுவேன். இப்போது 4 பெங்காலி படங்களில் நடித்து வருகிறேன். தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்கிறார் ரியா சென்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி