செய்திகள்,திரையுலகம் அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…

அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…

அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!… post thumbnail image
சென்னை:-தீபாவளியன்று வெளியான ‘கத்தி’ திரைப்படம், விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது மட்டுமல்ல திரைப்படத்தறையை சேர்ந்தவர்களையும் கவர்ந்திருக்கிறது. தற்போது வெளியான அனைத்து தியேட்டர்காளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கத்தி’க்கு பல ‘விஐபி’க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த பட்டியலில் நடிகர் தனுஷும் ஒருவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கத்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சூப்பர் படம் ‘கத்தி’, தரமான ஒரு படமாக அமைந்துள்ளது, சந்தோஷமாக இருக்கிறது. விஜய் சார், ஏ.ஆர்.முருகதாஸ் சார், என் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி