தீபாவளிக்கு தலைவரை பார்க்க வந்து இருக்கிறோம். அவரை சந்திக்காமல் செல்லமாட்டோம் என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இதுகுறித்த தகவல் வீட்டுக்குள் இருந்த ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து ரஜினி, ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கிருந்த உயரமான மேடையில் ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.
ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகமானார்கள். கோஷங்கள் எழுப்பினர். எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் என்று ரஜினி சொன்னார். பதிலுக்கு ரசிகர்களும் தீபாவளி வாழ்த்து கூறினார்கள். சிறிது நேரம் அங்கு நின்று ரசிகர்களை சந்தித்து விட்டு வீட்டுக்குள் சென்றார். பிறகு ரசிகர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி