சென்னை:-3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதையடுத்து, எதிர்நீச்சல், மான்கராத்தே ஆகிய படங்களுக்கும் இசையமைத்தார் அனிருத்.அந்த இரண்டு படங்களின் பாடல்களுமே மெகா ஹிட்டடித்ததால் அனிருத்துக்கு சினிமாவில் ஒரு மரியாதை ஏற்பட்டது. ஆனால், இப்போதோ கத்தி படம் கிடைத்ததும், அதையடுத்து டாணா படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்த அனிருத், திடீரென்று அந்த வேலைகளை அப்படியே போட்டு விட்டு கத்தி வேலைகளில் முழுவீச்சில் இறங்கி விட்டாராம்.
அதன்காரணமாக, டாணா பட வேலைகள் அப்படியே நின்று கொண்டிருந்ததாம். அனிருத்தின் இந்த இழுத்தடிப்பினால் சிவகார்த்திகேயனிடம் வாங்கிய கால்சீட்டும் வீணாகிக் கொண்டிருக்கிறதாம். ஆக, சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களுக்கு அவர்கள் கேட்பதற்கு முன்னமே பாடல் கேசட்டுடன் ஸ்பாட்டுக்கு சென்று கொடுத்து வந்த அனிருத், இப்போது அவர்கள் இவரைத் தேடிச் சென்று காத்துக் கொண்டிருந்தபோதும், இதோ அதோ என்று டீலில் விட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்தவகையில், பாடல்களுக்காக மாதக்கணக்கில் படநிறுவனங்களை காக்க வைக்கிற விசயத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் தம்பியாகி விட்டார் அனிருத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி