செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ பட டீசர், டிரைலர்களின் அமோக சாதனை!…

‘கத்தி’ பட டீசர், டிரைலர்களின் அமோக சாதனை!…

‘கத்தி’ பட டீசர், டிரைலர்களின் அமோக சாதனை!… post thumbnail image
சென்னை:-யு டியுப் வீடியோ இணையதளத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக கத்தி படத்தில் இடம் பெற்றுள்ள ஆத்தி…. பாடல் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அடுத்து வெளியிடப்பட்ட செல்ஃபி புள்ள.. பாடல் டீசரை இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

கத்தி டிரைலரை கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மொத்தத்தில் மூன்று நாட்களில் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட எண்ணிக்கையை கத்தி படத்தின் டீசர்களும், டிரைலர்களும் தொட்டிருக்கின்றன. இப்படி ஒரு சாதனையை கோச்சடையான் படம் கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி