டாக்கா:-வங்காள தேசத்தில் நடோர் மாவட்டத்தில் டாக்கா–ராஜ்சாஹி நெடுஞ்சாலையில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்து நமோரில் உள்ள பாரைக்ராம் என்ற இடத்தில் நடந்தது. இந்த விபத்தில் பஸ்களில் பயணம் செய்த 32 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வங்காள தேசத்தில் இதுபோன்ற பஸ் விபத்துக்கள் அடிக்கடி சாதாரணமாக நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகின்றனர். எனவே, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி