கடந்த 1992ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய், கத்தி படத்துடன் 57 திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார். மேலும் சமீபகாலமாக பொங்கல் அல்லது தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளில் ஏதாவது ஒரு பண்டிகையில் அவருடைய படம் ரிலீஸாகும்படி திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறார். ஒருசில ஆண்டுகளில் பொங்கல், தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளிலும் விஜய் படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
இந்த வருடத்துடன் சேர்த்து இதுவரை எட்டு வருடங்களில் விஜய்யின் படங்கள் பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகை நாட்களிலும் வெளிவந்துள்ளது.
பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய இரண்டு பண்டிகைகளிலும் வெளியான விஜய் படங்களின் பட்டியல்:
2000 – கண்ணுக்குள் நிலவு – பிரியமானவளே
2001 – பிரெண்ட்ஸ் – ஷாஜஹான்
2003 – வசீகரா – திருமலை
2005 – திருப்பாச்சி -சிவகாசி
2007 – போக்கிரி – அழகிய தமிழ்மகன்
2011 – காவலன் – வேலாயுதம்
2012 – நண்பன் – துப்பாக்கி
2014 – ஜில்லா – கத்தி
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி