புதுடெல்லி:-இந்திய பெண் பத்திரிகையாளர் அமைப்பின் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:– இந்தியாவில் அனைத்துத்துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு சிறப்பாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் துணை ராணுவ படைகளில் 1.99 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள். இந்த அளவினை 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்க செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை பிரிவில் 33 சதவீதம் அளவில் பெண் போலீசாரை நியமிக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கை மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி