எதிர்ப்பை மீறி ‘கத்தி’ படத்தை நாளை மறுநாள் (22–ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அதிக தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது. டிக்கெட் முன் பதிவு துவங்கி உள்ளது. நிறைய தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் ஒருவாரத்துக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டது.சில மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் இன்று பிற்பகல் முன் பதிவு துவங்குகிறது.
இதற்கிடையில் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். ‘கத்தி’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார். இன்னொரு புறம் எதிர்ப்பாளர்களுக்கும், தயாரிப்பு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விஜய் ரசிகர் மன்றத்தினர் ‘கத்தி’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கட் அவுட் வைத்தல், கொடி தோரணங்கள் அமைத்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி