சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 3 பாடல்களுக்கு ஏற்கனவே ஹாரிஸ் இசையமைத்து முடித்து விட்டார். இதில் இடம் பெற்றுள்ள ரொமன்டிக் பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.
தற்போது ஹாரிஸ் அஜீத்திற்காக மாஸான ஓபனிங் சாங்கிற்கு இசையமைத்துள்ளார். ‘அதாரு அதாரு… உதாரு உதாரு…’ எனத் தொடங்கும் பாடலை சிறப்பாக அமைத்துள்ளார். இன்னும் ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்க வேண்டியுள்ளது. அது முடிந்த பிறகு கூடிய விரைவில் படத்திற்கு பெயரும், இசையையும் வெளியிட உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி