சென்னை:-சமீபத்தில் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், பெண்கள் ஜீன்ஸ் அணிவது கலாச்சாரத்துக்கு எதிரானது. ஆண்களை தவறு செய்ய தூண்டுவது என்று கருத்து கூறியிருந்தார். இதற்காக பல பெண்கள் அமைப்புகள் யேசுதாசுக்கு கண்டனம் தெரிவித்தன. தற்போது மம்முட்டி மீது பாய்ந்திருக்கிறார்கள்.
குழந்தைகளுக்காக சமைக்க நேரம் ஒதுக்காதவர்கள் தாயாக இருக்கவே தகுதியற்றவர்கள் என்ற கருத்தை மம்முட்டி சொல்லியிருக்கிறார். அதனால், மம்முட்டி ஒரு ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். குழந்தைகளுக்கு சமைப்பது என்பது பெண்களின் விருப்பம், சூழ்நிலைய பொறுத்தது. ஏன் ஆண்கள் குழந்தைகளுக்காக சமைக்க கூடாதா? குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு பங்கில்லையா? என்று கேட்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி