சென்னை:-திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை மீனா குழந்தை பெற்ற பின் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் மீனா நடித்த திரிஷ்யம் படம் 150 நாட்கள் ஓடியது. வசூலிலும் சாதனை படைத்தது.இதையடுத்து தெலுங்கிலும் இந்த படத்தை ரீமேக் செய்தனர். அங்கு வெங்கடேசும், மீனாவும் ஜோடியாக நடித்தனர். ஆந்திராவிலும் இப்படம் ஹிட்டானது.
தற்போது மலையாளத்தில் தயாராகும் பாலயா கலாசகி என்ற படத்தில் அம்மா கேரக்டரில் நடிக்கிறார். தமிழ் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மீனாவிடம் தமிழ் திரையுலகில் அழகான கதாநாயகன் யார்?… என்று கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த மீனா, தமிழ் பட உலகில் அழகான கதாநாயகன் அஜீத். அவர் ரொம்பவும் அழகாக இருக்கிறார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி