செய்திகள்,திரையுலகம் பூஜை படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!…

பூஜை படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!…

பூஜை படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!… post thumbnail image
சென்னை:-விஷால்சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷால் தன்னுடைய சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. கணிசமான ஒரு தொகைக்கு இந்த உரிமையை சன் டிவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பூஜை படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், தீபாவளிக்கு வெளிவரும் இப்படத்தை அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி