செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…

‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…

‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘கத்தி’ திரைப்படம் இலங்கை அதிபர் ராஜபட்சவின் உறவினர் தயாரித்தது. ‘புலிப்பார்வை’ திரைப்படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலசந்திரனை தவறாகச் சித்திரித்துள்ளனர்.

ஆகவே, இந்தத் திரைப்படங்கள் வெளியிடப்பட்டால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். இதுகுறித்து மாநில காவல் துறைத் தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இரு திரைப் படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதி அளித்த உத்தரவு விவரம்: ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்கள் தணிக்கைத் துறையினரால் பார்க்கப்பட்டு, சான்று அளிக்கப்பட்டுள்ளது.

ஊகத்தின் அடிப்படையில் மனுதாரர் மனுச் செய்துள்ளார். அதன் அடிப்படையில், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. திரைப்படத்தை மனுதாரர் பார்க்காமலேயே மனு தாக்கல் செய்துள்ளார். திரைப்படம் வெளியாகி அப்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அதை அரசு பார்த்துக் கொள்ளும். ஆகவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி