செய்திகள்,திரையுலகம் இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…

இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!…

இயக்குனராகும் நடிகர் பிரசன்னா!… post thumbnail image
சென்னை:-நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய அவர், பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். 2012ல் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டவர், அதன்பிறகு கல்யாண சமையல் சாதம், புலிவால், நேற்று இன்று என சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தபோதும் எந்த படமும் ஓடாததால் மீண்டும் சறுக்கிக்கிடக்கிறார் பிரசன்னா.

இந்நிலையில், சில நடிகர்களும், இயக்குனர்களும் தற்போது தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கியிருப்பதைப் பார்த்து மனைவி சினேகாவுடன் இணைந்து தானும பட நிறுவனம் தொடங்கினார் பிரசன்னா.முதலில் தனது நிறுவனத்தில் மற்ற இயக்குனர்களுக்கு சான்ஸ் கொடுக்கப்போவதாக சொல்லி கதை கேட்டு வந்த பிரசன்னா, இப்போது தானே இயக்குனராகும் முடிவில் இருக்கிறாராம். அதனால் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். அதற்கான தொகையை தந்து விட்டு, அந்த கதையை நானே இயக்குகிறேன் என்று சிலரிடம் கதை கேட்டு வருகிறாராம். இதையடுத்து, வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் சில புதுமுக இயக்குனர்கள் பிரசன்னாவை தேடி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி