புதுடெல்லி:-இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பிராவோவுக்கு 40 சதவீதமும், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. நடுவர் கலுப்குரோவ் நடவடிக்கை எடுத்தார்.
இரு அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற இருந்த 3–வது ஒருநாள் போட்டி புயலால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 4வது போட்டி தர்மசாலாவில் வருகிற 17ம் தேதி நடக்கிறது. தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி