செய்திகள்,திரையுலகம் பூஜை திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு!…

பூஜை திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு!…

பூஜை திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு!… post thumbnail image
சென்னை:-விஷால்சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூஜை’. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும், வேந்தர் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள அதிபயங்கர சண்டைக்காட்சிகளுக்காக இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக தணிக்கைக் குழுவினர் கூறியுள்ளனர்.

இருந்தும், படத்திற்கு யு சான்றிதழ் பெற படக்குழுவினர் பெரிதும் முயன்று வருகின்றனர். இதற்காக, படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்து மீண்டு தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி