சென்னை:-தமிழ் திரையுலகில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்று ஒரு கலக்கு கலக்கினார். தற்போது குத்து பாடலுக்கு மட்டும் ஆடி வரும் இவர், விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளார்.
தமிழ் படங்களை தொடர்ந்து மறுத்து வந்த சார்மி, விக்ரமிற்காக மட்டும் இப்பாடலில் ஆட சம்மதித்துள்ளார். இப்பாடலுக்காக படக்குழு ரூ 2.5 கோடி வரை செட் போட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி