அதனால் பாட்டிக்கு பேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஆசை ஏற்பட்டது. ஆனால் பேஸ்புக் விதிகளின் படி 1905ம் ஆண்டிற்குபிறகு பிறந்தவர்களால் மட்டும் தான் பேஸ்புக்கில் சேர முடியும். அதனால் தனது வயதை குறைத்து பேஸ்புக்கில் பதிவு செய்து தனக்கான கணக்கை ஆரம்பித்தார் அன்னா பாட்டி.
அன்னா பாட்டி 1900ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். வரும் 15 தேதி வந்தால் அவருக்கு 114 வயது ஆகும்.
பேஸ்புக்கில் தனது வயதை 15 ஆக குறைத்து பதிவு செய்து பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
இது பற்றி அன்னா பாட்டி கூறியதாவது;பேஸ்புக்கில் இணைந்தது எனக்கு உற்சாகத்தை தந்துள்ளது. எனக்கு கூகுள் மற்றும் இமெயில் அனுப்புவது போன்ற தகவல்களை குறித்து முதன் முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்த வெரிசான் என்ற நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பேஸ்புக் எனக்கு புது உலகத்தை காட்டி உள்ளது, புதியவர்களுடன் இணையும் தளமாக இயங்குவதால் நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி